சிறுதானிய வெஜிடபிள் பிரியாணி.
ஆரோக்கியமான உணவென்றால் சுவையாக இருக்காது என்ற ஒரு கருத்து உண்டு, தானியங்கள் என்றாலே ராகி, கேழ்வரகு போன்றவைதான் நினைவிற்கு வரும். ஆனால் இவையனைத்தையும் விட ஆரோக்கியமானது தினை அரிசி.தானியங்கள் என்றால் அதில் தோசை அல்லது கஞ்சி போன்றவைதான் செய்வார்கள், ஆனால் தினை அரிசியில் பிரியாணியே செய்யலாம். தினை அரிசியில் செய்யும் வெஜிடபிள் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்வது போன்ற சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்: - தினை அரிசி - 1 கப் - தண்ணீர் - 3 கப் - நெய் - 2 ஸ்பூன் - உப்பு - தேவைக்கு ஏற்ப - நறுக்கிய காய்கறிகள் - அரை கப்(கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் ,புதினா – சிறிதளவு, பிரியாணி இலை - 1 , ஏலக்காய் - 2 , கிராம்பு - 4 , இலவங்கப்பட்டை - 1 , அன்னாசி பூ - 1 , சீரகம் - கால் ஸ்பூன்.
செய்முறை:- தினை அரிசியை நன்றாக கழுவி, வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். - ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் உட்பட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து அவை வெடிக்கும் வரை வதக்கவும்.- அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - அதன்பின் காய்கறிகள் மற்றும் புதினாவைச் சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - அதன்பின் தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
தினை அரிசியை வடிகட்டி அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். அரிசி முழுமையாக வேகும் வரை நடுத்தர முதல் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் நன்கு வற்றும் வரை கலவையை நன்கு கிளறி விடவும். தினை அரிசி நன்கு வெந்ததும் உப்பு பார்த்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்தவுடன் இறுக்கமான மூடி போட்டு7 நிமிடம் மூடி வைக்கவும்.சூடான தினை அரிசி வெஜிடபிள் பிரியாணி ரெடி. தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிடவும்.
0
Leave a Reply